
பிரித்தானியாவில் – குழந்தை ஒன்றின் இறப்பிற்கு காரணமான நொட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை NHS அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளின் பின் 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இங்கிலாதில் பிரசவத்தின் போது வைத்தியசாலையின் நடைமுறை தொடர்பில் 900 குடும்பங்களிடமும், 400 வைத்தியசாலை ஊழியர்களிடமும் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு Sarah Andrews என்ற பெண்ஒருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரகால சிசேரியன் அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ள அவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில். அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பிறந்து 23 நிமிடங்களிலேயே குழந்தை உயிரிழந்திருந்தது.
இந்நிலையில், நொட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை NHS அறக்கட்டளையானது, பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்றுவந்தது.
தற்போது வைத்தியசாலையும் குற்றத்தை ஒப்புக்கொண்டதனையடுத்து 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.