யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
இதன்படி,
- 1. தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்,
- 2. ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி,
- 3. லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம்,
- 4. வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன்
- 5. யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்நத வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம்
- ஆகியோரே யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.