கொடிகாமம் மிருசுவில் வடக்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிருசாவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் சாவகச்சேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துச் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்த்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் பொலிஸாரா, அல்லது ஆயுதப்படையை சேர்ந்தவரா அல்லது ஒட்டுக்குழு உறுப்பினரா என்பது தொடர்பில் எக்கருத்தும் வெளியிடவில்லை.