2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 329,668 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு 143 புள்ளிகளும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு 142 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கொழும்பு மாவட்டத்தில் சிங்கள மொழி மூலத்தில் 153 புள்ளிகளும் தமிழ் மொழி மூலத்தில் 144 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உதவித்தொகை வழங்கப்படவுள்ள 20,000 மாணவர்களில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.