அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவதன் மூலம் தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவை இரத்துசெய்துவிட்டு புதிய ஆணைக்குழுவை நியமிப்பதனூடாக “உள்ளூராட்சிமன்ற தேர்தலை” ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தேர்தல் நடைபெறாது பிரசாரம் செய்தார்கள்.
மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்பு கட்டுப்பணத்தை மற்றும் பெற்றுக்கொண்டு அதன் பின்பு தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் பின்பு திறைச்சேரியின் செயலாளரை கொண்டு நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று கூறுவதற்கும் அரசாங்கம் முயற்சித்தது.
அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இறுதி உபாயமார்க்கமாகவே அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவதன் மூலம் தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவை இரத்துசெய்துவிட்டு புதிய ஆணைக்குழுவை நியமிப்பதனூடாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு நாம் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அரசாங்கமானது இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் ஏன் ஈடுபடுகின்றது என்று எமக்கு தெரியவில்லை.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் கடந்த ஒருவருடமாக பிற்போடப்பட்டு இருந்தது. எனவே தேர்தல் நடைபெற வேண்டியதும், மக்கள் ஆணை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். என்றார்.