
யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்திய குழு ஒன்று வாழ்வெட்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளது.
குறித்த வாழள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நால்வர், யாழ்போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
சுன்னாக பகுதியில் – தெல்லிப்பளை பிரதான வீதியில் காரில் பயணித்தவர்களை பட்டாரக வாகனத்தில் வந்த குழுவினர் மோதித்தள்ளிய பின் இந்த வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஜெகன் குழு மற்றும் விக்டர் குழு ஆகிய இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க இன்றைய தினம் திரைப்பட பாணியில் பட்டாரக வாகனத்தினால் காரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.