Home செய்திகள் 13 குறித்து சம்பந்தனுடன் கலந்துரையாடிய ரணில்:

13 குறித்து சம்பந்தனுடன் கலந்துரையாடிய ரணில்:

18
0

13 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற, இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது மிக முக்கியமானது என இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் நேற்று ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.