முல்லைத்தீவு மாவட்டத்தில் கையேற்கப்பட்ட 35 வேட்பு மனுக்களில், 10 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.விமலநாதன் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய பெண்வேட்பாளர்கள் உள்வாங்கப்படாமை மற்றும் உரிய முகவர்களால் வேட்புமனு கையளிக்கப்படாமை ஆகிய காரணங்களாலேயே குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, துணுக்காயில் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் – இலங்கை தமிழரசு கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி,ஜக்கியமக்கள் கட்சி,அபிநவ நிதாஸ்பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜெயானந்தன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக்குழுவினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.