Home செய்திகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

18
0

உள்ளூராட்சி தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் இரு சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தில் – ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 141 அரசியல் கட்சிகளும், 21 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.