
ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 53 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹட்டன் மற்றும் நானுஓயா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ், நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.