Home செய்திகள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும்: எச்சரிக்கும் பொன்சேகா

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும்: எச்சரிக்கும் பொன்சேகா

24
0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாகவும், தெற்கு அரசியல்வாதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வடக்கிற்கு பொய்யுரைத்துள்ளார்.ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு குறிப்பிடுகையில் …

பாதாள குழுவினர் சுதந்திரமாக மனித படுகொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமாக உள்ளதுடன் நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. நாட்டு மக்கள் பட்டினியால் வாழும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.