யாழ்ப்பாணம் – அராலி மத்தி பகுதியில், வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, தென்னையில் இருந்து தேங்காய் ஒன்று அவரது நெஞ்சுப் பகுதியில் விழுந்ததினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.