
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இனறு வியாழக்கிழமை (19) இலங்கை வந்தடைந்தார்.
கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
தனது வருகை, மாலத்தீவு மற்றும் இலங்கையுடனான நெருக்கமான நட்புறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்திற்கு சான்றாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.