Home செய்திகள் மீண்டும் ஆனோல்ட் ஐ களமிறக்குகிறது தமிழரசுக் கட்சி!

மீண்டும் ஆனோல்ட் ஐ களமிறக்குகிறது தமிழரசுக் கட்சி!

20
0

யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவியில் இருந்து மணிவண்ணன் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள அப்பதவிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட்டினை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையில் நாளை(வியாழக்கிழமை) முதல்வர் தெரிவு நடக்கவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.