Home முக்கிய செய்திகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

16
0

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் 02.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய இன்று பிற்பகல் நடைபெறவிருந்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று கூடிய நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு, தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.