நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போராட்ட பேரணியில் பெருமளவான மக்களும் இணைந்து நல்லூர் நோக்கி பயணித்தது.
அதன்போதே அரசடி சந்தியில் வைத்து பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட காரணத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பெருமளவில் இராணுவத்தினர் அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.