நீராடச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்தார் எனக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சார்ஜன்ட் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருவதாகவும், வார விடுமுறைக்காக கிராமத்துக்கு வந்திருந்தபோதே நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மூன்று மணியளவில் வலஸ்முல்ல கல்வல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.