Home செய்திகள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லாததால் பேச்சுவார்த்தை இடை நிறுத்தம்: இரா.சம்பந்தன்

எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லாததால் பேச்சுவார்த்தை இடை நிறுத்தம்: இரா.சம்பந்தன்

17
0

சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழர் தரப்புடன் அரசாங்கம் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசித்திருந்த பேச்சுவார்தை முதல் நாள் பேச்சுக்களோடு இடைநிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்;

அரசியல் தீர்வு சம்பந்தமாக இதுவரை நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகக் கூற முடியாது. எதிர்பார்த்த அளவு மாற்றங்களோ, முன்னேற்றங்களோ தென்படவில்லை. தொடர்ந்தும் இழுத்தடிப்பு போக்கு தென்பட்டது. இதனால், எம்மால் முன்மொழியப்பட்ட அரசியல்  கைதிகள் விடுவிப்பு, காணி விவகாரம் உள்ளிட்ட சில  உடனடி விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் வழங்கி, தற்காலிகமாக பேச்சுகளை நிறுத்தியுள்ளோம் என்றார்.