1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்திந் போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரின் 49வது நினைவு தினம் இன்று யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் (11) செவ்வாய்க்கிழமை காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, வெவ்வேறு நேரங்களில் பல தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்களும், பொது மக்களும் வந்து அஞ்சலிகளை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.