Home செய்திகள் தாண்டிக்குளம் பகுதியில் பொலிஸ் சார்ஜனின் சடலம் வீதியிலிருந்து மீட்பு!

தாண்டிக்குளம் பகுதியில் பொலிஸ் சார்ஜனின் சடலம் வீதியிலிருந்து மீட்பு!

22
0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் ஒருவர் உயிரிழந்த நிலையில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஐன் வசந்த சந்தன நாயக்க என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவர். 

தாண்டிக்குளம் சந்தியிலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் 500மீற்றர் தொலைவிலுள்ள வளைவை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலுடன் குறித்த பொலிஸ் சார்ஜனின் சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.