Home செய்திகள் சமுர்த்தி கொடுப்பனவுகளில் தாமதம்: பந்துல்ல

சமுர்த்தி கொடுப்பனவுகளில் தாமதம்: பந்துல்ல

21
0

நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்படுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அரசாங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.