
இங்கிலாந்து மண்ணிலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள் செயற்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
American Virgin Orbit நிறுவனத்திற்கு சொந்தமான “ஜம்போ ஜெட்” அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலாக அதை ஏவுவதற்காக Newquay Cornwall பகுதியில் இருந்து செயற்கை கோளை எடுத்து சென்றிருந்தது.
இருப்பினும் சிறிது நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜம்போ ஜெட்டில் இருந்து ஏவப்பட்ட செயற்கை கோள் என்ன ஆனது என தெரியாமல் தொலைந்துபோனதாகவும், குறித்த செயற்கைக் கோள் செயற்திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் செயற்கை கோளை செலுத்த சென்ற 747 ஜம்ம்போ ஜெட் உம், அதில் பயணித்த Cosmic Girl உம் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.