Home செய்திகள் 400 விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்கிய மானிப்பாய் பிரதேச சபை:

400 விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்கிய மானிப்பாய் பிரதேச சபை:

22
0

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 400 விவசாயிகளுக்கு இயற்கை உரத்தினை மானிப்பாய் பிரதேச சபை வழங்கியுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மலசலகூடத்திட்டடத்தை வழங்குவதற்கு கடிதங்களும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.