Home செய்திகள் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்!

21
0

தேசிய அமைதி மற்றும் இன நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுவால் முன் மொழியப்பட்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத நம்பிக்கைகளுக்கு அவதூறு தெரிவிக்கும் வகையிலும், மத தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

தேசிய அமைதி மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த சில தீய சக்திகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் ஏற்படும் சீர்குலைவை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.