Home செய்திகள் கொக்குவில் பொற்பதி வீதியில் புலிகளின் ஆயுதங்களாம்…! அகழ்வு பணிகள் ஆரம்பம்:

கொக்குவில் பொற்பதி வீதியில் புலிகளின் ஆயுதங்களாம்…! அகழ்வு பணிகள் ஆரம்பம்:

22
0

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறி குறித்த பகுதியினை அகழ்வு செய்யும் பணி இன்றைய தினம் (9) திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் முன்னர் அமைந்திருந்தமையால் அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி, ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.