Home செய்திகள் தமிழக ஆளுநரின் கருத்திற்கு சீமானும், கமலும் கண்டனம்:

தமிழக ஆளுநரின் கருத்திற்கு சீமானும், கமலும் கண்டனம்:

29
0

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்ற வார்த்தை குறித்து கருத்து தெரிவித்ததற்கு சீமானும், கமல்ஹாசநும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அவர் தனது உரையின்போது, ‘தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்’ என்று கூறினார்.

அவரது இந்த பேச்சு தொடர்பில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித போது கூறுகையில்,

பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னாடி, திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது.எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு. எனவே தேவையில்லாதவற்றை பேசிக்கொண்டிருக்கக் கூடாது. என தெரிவித்தார். 

இது தொடர்பில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறுகையில்,

கமல்ஹாசன் கூறுகையில், ‘நீண்ட நெடிய, போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது; இதை மாற்றச் சொல்வதற்கு ஆளுநர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்வாரா?’ என தெரிவித்துள்ளார்.