2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
இன்று(25) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் ஸ்மிரிதா மந்தனா 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து 117 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் ஹசினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில் இந்திய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அணி தங்கம் வென்றுள்ளது.