Home செய்திகள் 2023 ல் வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

2023 ல் வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

21
0

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த தெரிவித்தார்.

இதன்படி, போக்குவரத்து விதி மீறல்களை புரிகின்ற வாகன சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்.

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 அத்துடன், இரத்துச் செய்யப்பட்டு ஒரு வருட காலத்தின் பின்னரே  புதிய சாரதி அனுமதிப்பத்திரமொன்றை பெறுவதற்கு விண்ணப்பம் அனுப்பப்பட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.