Home செய்திகள் சிறைச்சாலையில் 8 விடுதலைப் புலிப் போராளிகள்: நீதி அமைச்சர் தகவல்!

சிறைச்சாலையில் 8 விடுதலைப் புலிப் போராளிகள்: நீதி அமைச்சர் தகவல்!

30
0

பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளதாகவும், அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து,அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன். எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கை ஆட்சியாளர்களால் காலம் காலமாக நடாத்தப்பட்டு வரும் அரசியல் நாடகத்தின் ஓர் அங்கமாகவே இதையும் பார்க்கவேண்டியுள்ளது.