மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் கீழ் வரும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வடமாகாணத்திற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரத்நாயக்க அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தினை திறந்துவைத்தனர்.
நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர்,உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ஆகியோர் உட்பட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளபட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.