
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு சொந்தமான 105 மீட்டர் நீளம் கொண்ட ‘ஓஷன் ஒடிஸி’ சுற்றுலாக்கப்பல் 108 சுற்றுலாப் பயணிகளுடன் முதற்தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பல் இன்று திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணிக்கிறது.
இக் கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருணாகல், ஹபரணை, சிகிரியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த கப்பல் நாளைமறுதினம் புதன்கிழமை இரவு 7 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.