Home உலக செய்திகள் கனடாவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் பலி!

கனடாவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் பலி!

27
0

கனடா – டொரண்டோவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுளள வோன்  (Vaughan) எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

 நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். 

சந்தேக நபர், பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்துள்ளார் எனவும் ஜிம் மெக்ஸ்வீன்  தெரிவித்துள்ளார். 

குடியிருப்புக் கட்டடமொன்றில் இத்துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அங்கு பொலிஸ் அதிகாரிகள் கவந்தபோது  உயிரிழந்த பலரை கண்டதாகவும் பொலிஸ் அதிகாரி மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவத்துக்கான காரணம் மற்றும், உயிரிழந்தவர்களுக்கும் சந்தேக நபருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.