Home செய்திகள் மார்கழி இசை விழா – எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை...

மார்கழி இசை விழா – எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கைலாசபதி கலையரங்கில்:

31
0

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 

குறித்த நிகழ்வுகளில் இலங்கை கலைஞர்கள் மட்டுமின்றி இந்திய கலைஞர்களும் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்த உள்ளனர். 

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் குறித்த உற்பத்தியாளர்களினுடைய கண்காட்சியும் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அண்மையில் உள்ள மண்டபத்தில் இதன் போது இடம்பெறவுள்ளது. 

உள்ளூரிலே காணப்படுகின்ற கலைஞர்களது திறமைகளையும் அவர்களுடைய கலைத்திறனையும் வெளிக்கொணர்வதற்காகவே குறித்த நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ் வணிகர் கழகம் தெரிவித்தது.