மாத்தறை – பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 45 வயதான 5 அடி 3 அங்குலம் உயரமுடையவராவார் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸாரால் அடையாளம் காண முடியாத நிலையில் அழுகிக் காணப்பட்ட அச் சடலம் மீட்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.