இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு விழா இன்று இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இவ்விழா இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் , யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவ சுப்பிரமணியம் பத்மநாதன் சிறப்புரையாற்றவுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.