கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளானதில் அதில் பயணம் செய்த 23 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (05) காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கு சாரதியே முழுப் பொறுப்பு என சம்பவத்தை நேரில் அவதானித்த மக்கள் தெரிவித்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் சாரதியின் தூக்க கலக்கமா, அல்லது அதிவேகமா அன்றி சாரதி குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விபரம் பொலிஸாரின் விசாரணையின் பின்னரே தெரிய வரும்.
இதற்கமைய விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.