Home தாயக செய்திகள் இன்று(05-12-2022) நள்ளிரவு முதல் மீண்டு அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை!

இன்று(05-12-2022) நள்ளிரவு முதல் மீண்டு அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை!

33
0

உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4610 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எனவும், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1850 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எனவும், 2.3 கிலோகிராம் எரிவாயுவின் விலை 45 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 860 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எனவும், அந் நிறுவனம் அறிவித்துள்ளது.