Home தாயக செய்திகள் கிளிநொச்சியில் – கந்தன்குளத்தில் இருந்து அடி காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் – கந்தன்குளத்தில் இருந்து அடி காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

35
0

கிளிநொச்சி பிரதேசத்தில் அனைந்துள்ள விநாயகபுரம் கிராமத்தின் கந்தன்குளத்தில் இருந்து இருபத்தொரு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்டு உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ள போதும் குறித்த சடலம் யாருடையது எந்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

அடை காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதால், இது கொலையாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னேடுத்து வருவதாகவும் பொலிஸ்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.