Home செய்திகள் மாங்குளத்தில் – துப்பாக்கிகள் மற்றும் வாள் மீட்பு!

மாங்குளத்தில் – துப்பாக்கிகள் மற்றும் வாள் மீட்பு!

39
0

மாங்குளம் கல்கூவா்ரி பகுதியில்   வீடொன்றில்  மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சில ஆயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளன.

மாங்குளம் பகுதியில்  உள்ள கல்குவாறிப்பகுதியில் நேற்று (01)  கடமையில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகன் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதல் நடாத்தியதில்  இரண்டு துப்பாக்கிகள், 100 கிராம் ஈயம், தீக்குச்சிமருந்து, துப்பாக்கிரவைகள், உள்ளூர் நான்கு  மான் கொம்புகள், மற்றும்  வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.