இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, புரிதலை மேம்படுத்துவதற்காக சமந்தா பவர், நேற்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து இருந்தார்.
இதன்போது, இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் எவ்வாறு சாத்தியமான வழிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் இருவரும் கலந்துரையாடியதாகவும், குறிப்பாக இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என்றும் சமந்தா பவர் அடிக்கோடிட்டுக் காட்டியதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன பேச்சாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்தார்.