யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை, இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ் மாநகர சபைக்கு நேற்று (புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.
இச் சந்திப்பின் போது, யாழ் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இராணூவ அச்சுறுத்தல், நில அபகரிப்பு, சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத மக்கள், மற்றும் யாழ்நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.