இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 26,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 10,000 பேர் மட்டுமே தண்டனை கைதிகள் எனவும், ஏனைய 16,000 பேரும் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளவர்கள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இவ்வாண்டில் கைதிகளின் எண்ணிக்கை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.