அராலி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும் என அவர்கள் தெரிவித்ததோடு, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் குறித்த கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு தாம் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.