Home தாயக செய்திகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே நேரத்தில் மணியோசையோடு எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே நேரத்தில் மணியோசையோடு எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

46
0

தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களை போற்றி வணங்கும் புனித நாளான இன்று (நவம்பர் 27) அனைத்து மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் மாவீரர் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள், ஆலயங்கள் என்பவற்றில் சரியாக மாலை 6:05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு அதன் பின்னர் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பொதுச்சுர்களை ஏற்றி வைத்தனர்.

மிகவும் உணர்வுபூர்வமாக இவ்வாண்டு தமிழர் தாயகமெங்கும் மீழ் எழுச்சியுடன் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்று அஞ்சலிகள் தெலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், முள்ளியவளை துயிலுமில்லத்தில் தளபதி லெப்டினன்ட் கேணல் குட்டிமணியின் தாயாரும், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் கரும்புலி மேஜர் காந்தரூபனின் தந்தையும், கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் முன்னாள் மூத்த போராளியும், மாவீரர் அறவிழியின் தந்தையுமான பசீர் காக்கா அவர்களும் பொதுச்சுடர்களை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இதே போல் எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம் – வடமராட்சி, ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் – திருகோணமலை, தேராவில் மாவீரர் துயிலுமில்லம் – முல்லைத்தீவு, மற்றும் தாண்டியடி – மட்டக்களப்பு, கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக – யாழ்ப்பாணம், நல்லூர் தியாகி திலீபன் நினைவு தூபி முன்பாக – யாழ்ப்பாணம், நகரசபை மண்டபம் – வவுனியா, ஆகிய இடங்களிலும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.