யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் இடம்பெற்ற நினைவேந்தலின்போது மாவீரர் பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்ததை தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவீரர் நினைவுத் தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மாவீரர் நினைவாகப் பயனுள்ள மரக்கன்றுகளை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
