தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் தினமான நேற்று (26-11-2022) தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அமைந்துள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ்கம் – புதுவை மாநிலம் பாகூரில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டிருந்ததோடு தேசிய தலைவரின் படங்களையும், தமிழீழ தேசியக் கொடியையும், பிரம்மாண்ட கட்டவுட்டையு சுமந்தவாறு மக்கள் மகிழ்ச்சியோடு எழுச்சி கொண்டவர்களாக காணப்பட்டதோடு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.