Home தாயக செய்திகள் புகழ்பூத்த சங்கீத வித்துவான் A.K.கருணாகரன் காலமானார்!

புகழ்பூத்த சங்கீத வித்துவான் A.K.கருணாகரன் காலமானார்!

56
0
AK.Karunakaran

சங்கீதத்துறையில் தனக்கென தனித்தடம் பதித்த, புகழ்பூத்த  கர்நாடக  சங்கீத வித்துவான் A.K.கருணாகரன் தனது 77 ஆவது வயதில் நேற்று (19) கொழும்பில் காலமானார்.

புகழ்பூத்த  கர்நாடக  சங்கீத வித்துவான் A.K.கருணாகரன் யாழ்ப்பாணம் – கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர்.  
  
அன்னார் யாழ்ப்பாண பல்கலைக்கழக சேர் பொன். இராமநாதன் அவைக்காற்றுகை மற்றும் கட்புலக்கலைகள் பீடத்தின் போதனாசிரியராகவும் இசை விரிவுரையாளராகவும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகவும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் இசை விரிவுரையாளராகவும் தமிழ் இசை வாத்தியக்குழு இயக்குனராகவும் பல்வேறு தடங்களை சங்கீதத்துறையில் பதித்தார்.

இலங்கை வானொலியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் 40 ஆண்டுகளாகவும் பணியாற்றியுள்ளார்.

அன்னார் யாழ்ப்பாண பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் அவைக்காற்றுகை மற்றும் கட்புலக்கலைகள் பீடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று “சங்கீதரத்தினம்” எனும் பட்டம் பெற்று, சென்னை அரசு இசைக் கல்லூரியில் சங்கீத வித்வான் மற்றும் இசை கற்பிப்பதில் டிப்ளோமா பட்டமும் பெற்றார்.

பல இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “ஆலாபனா” எனும் சங்கீத சபாவை பல ஆண்டுகளாக கொழும்பில் நடத்தி வந்தார்.

அன்னார்  “சங்கீதானுபவம்”  எனும் நூலினையும் எழுதி வெளியிட்டார்.

ஈழத்து இசை பாரம்பரியத்தில் குழந்தைகளுக்கு இசையைக் கற்பித்து, இசை வல்லுனர்களாக்கியவருள் முதன்மையானவரான அன்னாரின் மறைவு, சங்கீத உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21-11-2022) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.