Home உலக செய்திகள் இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை – மூவர் கைது!

இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை – மூவர் கைது!

52
0

இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, குறித்த கொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் – கேம்பிறிட்ஜ் நகரில் “Cam River” இற்கு அருகில் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புள்ளவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 வயது சிறுவன் ஒருவன் கேம்பிறிட்ஜ் பகுதியில் வீட்டிலும், இரண்டு 17 வயது சிறுவர்கள் சவுத் கேம்பிறிட்ஜ்ஷேர் பகுதியில் உள்ள இல்லத்திலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.