முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (19) மாவீரர் நாள் நிகழ்விற்கான முன் ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை இங்கு எந்தவிதமான நிகழ்வுகளையும் செய்ய முடியாது எனவும் அச்சுறுத்தியதோடு ஏற்பாட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்களை ஒளிப்படம் எடுக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள 592 பிரிகேட் படைமுகாம் இராணுவத்தினரே நினைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து துப்பரவாக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறி இராணுவத்தினர் தடை ஏற்படுத்திய நிலையில் அங்கு இருந்தோரை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்திய போது ஏற்பட்டுகளில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் நினைவேந்தல் குழுவிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு இயந்திரங்களை பயன்படுத்தாமல் துப்பரவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்ததை அடுத்து படையினர் அப்பகுதியிலிருந்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து ஒளிப்பட கமெரா மூலம் தொடர்சியாக காணொளி பதிவுகளை மேற்கொண்டு வருவதாக அங்குள்ளவர்களை