Home செய்திகள் ஒட்டுக்குழு பிள்ளையானும், இராணுவ புலானாய்வாளன் அருணும் புதிய கூட்டு:

ஒட்டுக்குழு பிள்ளையானும், இராணுவ புலானாய்வாளன் அருணும் புதிய கூட்டு:

64
0

கடத்தல், மற்றும் கொலைச் சம்பவங்களோடு தொடர்புடைய பிள்ளையானும், போதைவஸ்து கடத்தல் மற்றும் காட்டிக்கொடுத்தல் உட்பட தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னிண்டு நடாத்திவரும் இராணுவ புலனாய்வாளன் அருண் சித்தார்த்தும் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளனர்.

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட்ட பலரின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை சிறீலங்கா அரசபடைகளோடு இணைந்து செய்தவர் தான் பிள்ளையான் என்பவர். அவர் ராஜபக்சேக்களுடன் மிக நெருக்கமான உறவோடும், அவர்களின் பாதுகாப்போடும் வாழ்ந்துவருபவர்.

யாழ்ப்பாணத்தில் வழக்கு இலக்கம்  MC Court 292/17 இன் போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு இருந்த அருண் சித்தார்த் என்கிற நபர் இராணுவ புலனாய்வாளனாக செயற்பட்டுக்கொண்டு தற்போதும் கொலை , கடத்தல் , கற்பழிப்பு, காணி மோசடி ,மணல் வியாபாரம் என வரையற்ற  குற்றங்களை செய்துவருபவர்.

அது மட்டுமன்றி சிறீலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக போராட்டங்கள், ஊர்வலங்கள் என முன்னெடுத்த அதேவேளை தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை மற்றும் போராட்டங்களை தடுக்கும் முகமாக பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து தமிழர் போராட்டங்களையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருவரும் தற்போது கூட்டணி அமைத்திருப்பது வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவும், அரசியல் தீர்வு விடையத்தில் தடைகளையும், சிக்கல்களையும் ஏற்படுத்தவும், வடபகுதி மக்களின் மீளெழுச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.